இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கை: கொழும்பு சென்றவர் பலி

Published

on

தொழிற்சங்க நடவடிக்கை: கொழும்பு சென்றவர் பலி

ஹொரபே பிரதேசத்தில் தொடருந்தின் கூரை மீது ஏறி பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் கூரையில் ஏறி பயணித்த பயணி ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த பயணி கண்டியில் இருந்து கோட்டைக்கு அலுவலக தொடருந்தில் ஏறியதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டமையினால் கிடைத்த தொடருந்தில் பயணிக்க முயற்சித்தவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொடருந்து சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தற்போது பல தொடருந்துகள் இரத்து மற்றும் தாமதம் ஏற்படுவதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Exit mobile version