இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் இலங்கை
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மறுஆய்வு குறித்து இலங்கை அதிகாரிகள் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் குழு 2023 செப்டெம்பர் 14 மற்றும் 27ஆம் திகதிகளுக்கு இடையில் கொழும்புக்கு விஜயம் செய்கிறது.
முன்னதாக 2023 மார்ச் மாதத்தில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியது.
இந்த நிலையிலேயே தற்போது முதல் ஆய்வு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.