இலங்கை

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Published

on

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது நேற்று(10.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையிலான குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 4000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த இரண்டு மாகாணங்களிலும் முக்கியமான பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படை, குற்றப் புலனாய்வுத் துறை, அரச புலனாய்வு சேவை , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பிற பொலிஸ் பிரிவுகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version