இலங்கை

மகிந்த பதவி விலகியதும் கோட்டாபய நம்பிக்கை வைத்த முதல் நபர்

Published

on

மகிந்த பதவி விலகியதும் கோட்டாபய நம்பிக்கை வைத்த முதல் நபர்

கடந்த வருடம் கடும் இக்கட்டான நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில் நம்பிக்கை வைத்தது ரணில் விக்ரமசிங்க மீதுதான் என வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யார் என்ன சொன்னாலும் நாங்கள் அனைவரும் ஒன்றுகூடியே ரணில் விக்ரமசிங்கவை இந்தப் பதவிக்கு கொண்டுவந்தோம்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மீது முதலில் நம்பிக்கை வைத்தது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தான்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்த முடிவு தவறானது என எப்போதாவது நிரூபிக்கப்பட்டதா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version