இலங்கை
பணத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு பிள்ளையானால் நேர்ந்த கதி
பணத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு பிள்ளையானால் நேர்ந்த கதி
பணத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காட்டிக் கொடுத்துவிட்டு வந்து தனியாகப் பிரிந்து கட்சி வளர்த்த பிள்ளையான் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருக்க மாட்டாரா என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் இலங்கையர்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எமது நாட்டுசுற்றுலா துறையை ஊக்குவிக்க முயன்றவர்களை கொலை செய்தது ராஜபக்ச அரசாங்கம் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
அரச புலனாய்வுத் துறையில் ஒரு முஸ்லிம் பிரதானியை வைத்துக்கொண்டு சகல விடையங்களையும் செய்துவிட்டு இன்று ஏதும் தெரியாத போல் நடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
உயிரிழந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.