இலங்கை
சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்!
சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவத்தினை கொண்டு தங்களது சொந்த சிங்கள மக்களையே பலிவாங்கும் நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் ‘சனல் 4’ வெளியிட்ட ஆவணப்படம் குறித்து தமிழ் மக்கள் ஆச்சரியப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மைகள் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவை என்றும், இறுதி யுத்தம் தொடர்பான உண்மையினை சிங்கள மக்களுக்கு புரியவைப்பதற்கு போர் முடிந்து 15 வருடங்களாக போராடுவதாகவும்,அரசியல் இலாபங்களுக்காக தங்களது சொந்த மக்களையே பலிவாங்கும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.