இலங்கை
சனல் 4 காணொளி தொடர்பில் மகிந்த கட்சி தகவல்
சனல் 4 காணொளி தொடர்பில் மகிந்த கட்சி தகவல்
சனல் 4 காணொளி மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் உண்மைகள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
குறித்த காணொளி பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டவை என கட்சி தெரிவித்தள்ளார்.
இந்த காணொளியை தமது கட்சி நிராகரிப்பதாக அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அப்போதைய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியீட்டுவதில் எந்தப் பிரச்சினையும் காணபடவில்லை.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலகுவாக வெற்றிபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.