இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்துக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள்

Published

on

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்துக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் (07.09.2023) இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிஸாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறித்த பகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அகழ்வாய்வின் முதலாம் நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வாய்வு தொடர்பிலும், பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version