இலங்கை

புற்றுநோயுடன் போராடும் மாணவர் உயர்தர பரீட்சையில் சித்தி

Published

on

புற்றுநோயுடன் போராடும் மாணவர் உயர்தர பரீட்சையில் சித்தி

பாதுக்க பிரதேசத்தில் புற்றுநோயுடன் போராடி உயிரியல் பிரிவில் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாணவர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

யோஹான் தெவ்திலின என்ற இந்த மாணவர் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

அதற்கமைய, மாணவர் இரண்டு ஏ சித்திகளையும் ஒரு சி சித்தியையும் பெற்றுள்ளார்.

“தேர்வுக்கு 6 மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. வீட்டில் இருந்தே படித்தேன். பரீட்சைக்கு போகும்போது நடக்கக்கூட முடியாது. என் தந்தை என்னுடன் வந்தார்.

எனது எதிர்கால நம்பிக்கை மருத்துவராக வேண்டும் என்பதுதான். சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்கு உதவ விரும்புகிறேன்’’ என சித்தியடைந்த மாணவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version