இலங்கை
கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு அதிர்ச்சி
கொழும்பின் புறநகரில் கொள்ளையடிக்க சென்றவருக்கு அதிர்ச்சி
ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் கத்தியுடன் வீடொன்றில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர் கணவன் மனைவியினால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விடியற்காலையில் நிஞ்ஜா வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
அங்கு, கொள்ளையன் அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்கிவிட்டு ஓட முயன்றுள்ளார். அப்போது, வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் கொள்ளையனுடன் சண்டையிட்டு, மடக்கிப் பிடித்தனர்.
போராட்டத்தின் போது கொள்ளைக்காரரின் கையிலிருந்த மன்னா கத்தியை வீட்டின் உரிமையாளர் பிடுங்கி அதன் மூலம் கொள்ளையனை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த கொள்ளையன் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே கொள்ளையடிக்க வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.