இலங்கை
சனல் – 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான்! அம்பலமாகும் உண்மைகள்
சனல் – 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான்! அம்பலமாகும் உண்மைகள்
ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அனைத்து திட்டமிடல்களும் பிள்ளையானால் சிறையில் இருந்த போது திட்டமிடப்பட்டதாகவும் அதற்கான குண்டுதாரிகளை அங்கு வைத்துதான் தெரிவு செய்துள்ளனர் எனவும் பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சனல் – 4 ஆவணப்பட விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பபட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “பிள்ளையான் என்பவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா ஆவார்.
இவரை வைத்துதான் மகிந்த தரப்பால் தாக்குதலுக்கான அனைத்து திட்டமிடல்களும் வகுக்கப்பட்டுள்ளன.
சனல் – 4 ஊடகத்தின் மூலம் மௌலானாவே சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் குறிப்பாக ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.