இலங்கை

ஹோட்டலுக்குள் இரவு முழுவதும் கொடூரமாக தாக்கப்பட்ட காதலி

Published

on

ஹோட்டலுக்குள் இரவு முழுவதும் கொடூரமாக தாக்கப்பட்ட காதலி

நிட்டம்புவ எல்லகல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு தனது காதலியை திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தி அழைத்துச் சென்ற காதலன், விடியும் வரை கொடூரமாக சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடூரமான முறையில் தாக்கப்பட்ட 29 வயது காதலி வத்துபிட்டியல வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சுவாச இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காதலியை கொடூரமாக தாக்கிய 28 வயது காதலனை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான விவசாய விஞ்ஞான பட்டதாரியான காதலியும் அவரது காதலனும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலிருந்தே காதல் தொடர்பில் இருந்துள்ளனர்.

பட்டப்படிப்பை முடித்த காதலிக்கு நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை கிடைத்துள்ளதுடன், காதலன் இரத்தினபுரி பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வு தொழிலில் இணைந்து கொண்டுள்ளார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த காதலி தனது மூத்த சகோதரனுடன் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளார். இருவரும் ஒரே அறையில் தங்கி பணிக்காகச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியை சேர்ந்த காதலன் வாரத்திற்கு ஒருமுறை நிட்டம்புவில் உள்ள தனது காதலியை பார்க்க வருவது வழக்கமாகும். இந்த நிலையில் காதலன் தனது காதலி வேறு ஒரு இளைஞனுடன் பழகுவதாக கூறி தகராறு செய்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி காதலியின் சகோதரன் குருநாகலில் உள்ள வீட்டுக்கு வார இறுதிக்கு சென்றுள்ளார். ஆனால் காதலி வீட்டிற்கு செல்லாமல் விடுதியில் தங்கி இருந்துள்ளார். அன்று மாலை நிட்டம்புவ பகுதிக்கு வந்த காதலன் காதலியை விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு இருவரும் சென்றுள்ளனர், அங்கு காதலன் இரவு உணவு கொண்டுவருவதாக கூறி அறையை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு மதுபான போத்தலுடன் அறைக்கு வந்த காதலன் அதை குடித்துள்ளார். பின்னர் காதலன் காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விடியும் வரை கொடூரமாக தாக்கியுள்ளார். காதலனின் கொடூர தாக்குதலால் பலத்த காயம் அடைந்த காதலி தரையில் விழுத்துள்ளார்.

காதலி கீழே விழுந்து படுகாயமடைந்ததாகக் கூறி, காதலனின் விடுதி ஊழியர்களின் உதவியுடன் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். காதலியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப வத்துபிட்டியல வைத்தியசாலை ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் அவரது உயிரை காப்பாற்ற முடியாததால் மீண்டும் வட்டுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது காதலி வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version