இலங்கை

இலங்கையில் அடுத்த பூகம்பத்தை வெடிக்க வைக்கத் தயாராகிறது சனல் 4!

Published

on

இலங்கையில் அடுத்த பூகம்பத்தை வெடிக்க வைக்கத் தயாராகிறது சனல் 4!

இலங்கை அரசியல் மட்டத்தில் மீண்டும் ஒரு பூகம்பத்தை வெடிக்க வைக்கத் தயாராகிறது சனல் 4 ஊடகம்.

இலங்கையில் கடந்த 2019 மே மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை மட்டுமல்ல சர்வதேச நாடுகளையும் உலுக்கிப் போட்டது.

உயிர்கள் காவுகொள்ளப்பட்ட அந்த நாட்களை இலங்கையர்கள் வாழ்வில் ஆறாத வடுக்களாக மாற்றியது. இன்றுவரை அது மனங்களில் கணன்று கொண்டிருக்கிறது.

முடிவில்லாது விசாரணைகள், ஆணைக்குழுக்கள் என்று காலம் கடந்து கொண்டிருக்கின்றனவே தவிர, பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த நிலையில், புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சனல் 4 தொலைக்காட்சி.

இந்த குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் இதில் சில பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த குண்டு தாக்குதல் உடன் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான பின்னணியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை பிரித்தானியாவின் சனல் 4 நிறுவனம் நாளைய தினம் வெளியிட உள்ளது.

இந்த காணொளியில் தகவல் இடித்துரைப்பாளர் (whistleblower) தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பின்னணியை வெளிப்படுத்தும் நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கையின் புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சாலே என்பவர், ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியாக இந்த குண்டு தாக்குதல் அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என ராஜபக்சக்கள் விரும்புவதாகவும் அவ்வாறான ஒரு சூழ்நிலை இருந்தால் மட்டுமே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏற முடியும் எனவும் அவர்கள் கருதுகின்றனர் என சுரேஷ் சாலே தம்மிடம் கூறியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

ஹான்சீர் அசாத் மௌலானா (Hanzeer Azad Maulana) என்ற நபரே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்த குண்டு தாக்குதல் ஒன்றிரண்டு நாட்களில் திட்டமிடப்படவில்லை எனவும் மூன்று ஆண்டுகளாக திட்டமிடப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சி பீடம் ஏறியதும் சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் இது ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் நாட்டின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக கருதப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையின் பிரதான வகிபாகத்தை வகித்த தலைவர்களில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சக்கள் முன்னிலை வகித்தனர்.

மௌலானா கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி இருந்தார் என்பதுடன் அவர் ஐரோப்பிய புலனாய்வு பிரிவினர் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பனவற்றில் இந்த தாக்குதல் பின்னணி பற்றிய விபரங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த தகவல்கள் உண்மையானது என குறித்த தரப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் சுரேஷ் சாலேக்கும் இடையிலான தொடர்பு குறித்து முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகளை இராணுவ புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியதாக மற்றுமொரு இடித்துரைப்பாளர் தெரிவித்துள்ளார்.

குண்டு தாக்குதலுக்கு முன்னதாகவும் அதன் பின்னரும் இவ்வாறு தடை ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் ஆட்சிக்கு இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் இடமாற்றப்பட்டனர்.

மேலும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இந்த விசாரணைகள் தொடர்பான பிழையான தகவல்களை வழங்கி பொலிஸாரை பிழையாக வழிநடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய புலனாய்வு பிரிவினர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணைகள் நடைபெற்ற போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய விசாரணை அறிக்கையை வெளியிட விரும்பவில்லை என மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையானின் நெருங்கிய சகா
மௌலானா பிள்ளையானின் நெருங்கிய சகா என தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையான் சிறையில் இருந்த காலத்தில் குண்டு தாக்குதல் நடத்திய சிலருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக மௌலானா தெரிவிக்கின்றார்.

இந்த கடும் போக்குடைய கும்பலை பயன்படுத்தி கொலைகளை மேற்கொள்ள முடியும் என அடையாளம் கண்டு கொண்டதாக மௌலானா தெரிவிக்கின்றார்.

மேலும், பிள்ளையானும் சுரேஷ் சாலையும் இணைந்து குறித்த குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த குற்றவாளிகள் உலக விவகாரங்களில் நாட்டமற்றவர்கள் எனவும் இவர்களை தங்களுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிள்ளையான் கூறியதாக தெரிவிக்கின்றார்.

தாக்குதல் இடம் பெற்ற தினத்தில் தாஜ்சமுத்திரா ஹோட்டலுக்கு சென்று ஒருவரை அழைத்து வருமாறு சுரேஷ் சாலே தம்மிடம் கூறியதாகவும் தம்மால் அங்கு செல்ல முடியவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாஜ்சமுத்ரா ஹோட்டலில் தொலைபேசியில் பேசும் காட்சிகள் அச்சந்தர்ப்பத்தில் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவந்திருந்தன.

குறித்த நபர் அங்கு தாக்குதல் நடத்தாது சிறிய ஹோட்டல் ஒன்றில் குண்டை வெடிக்க செய்தவிடயத்தை மேற்கோள்காட்டி பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும் தமக்கும் இந்த கூறும் நபருக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவும் சுரேஷ் சாலே தெரிவித்துள்ளார்.

குறித்த காலப் பகுதியில் தாம் இலங்கையில் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கடிதம் ஒன்று மூலம் செனல்-4 நிறுவனத்திற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குிறத்து பிள்ளையானுடனும், ராஜபக்சர்களிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என செனல்-4 நிறுவனம் தெரிவித்துள்ளதாக தி. டைம்ஸ் என்னும் பிரித்தானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் 24.11.2022 அன்று உயிர்த்த ஞாயிறு வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள் நுழைய அனுமதியளிக்கப்படவில்லை.

நீதிமன்ற செய்தியாள்ர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனைச் செய்யப்பட்ட பின்னரேயே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் வியாழக்கிழமை (நவ. 24)நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்றில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் , ருஷ்தி ஹபீப் , சட்டத்தரணிகளான ஜி.கே. கருனாசேகரவும், விஜித்தாநந்த மடவலகம, சுரங்க பெரேரா, ரிஸ்வான் உவைஸ் , அசார் முஸ்தபா, இம்தியாஸ் வஹாப், சச்சினி விக்ரமசிங்கவும் உள்ளிட்டோர் ஆஜராகினர். சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சஜித் பண்டார உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் முன்னிலையாகினர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி மனுஷிகா குரே உள்ளிட்ட சட்டத்தரனிகள் முன்னிலையானார்.

வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகளாக

1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி

2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை

3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்

4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்

5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்

6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்

7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்

8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்

9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி

10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி

11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்

12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்

13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்

14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்

15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்

16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்

17. யாசின் பாவா அப்துல் ரவூப்

18. ராசிக் ராசா ஹுசைன்

19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்

20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்

21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்

22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி

23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்

24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி

25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம் ஆகியோர் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

என்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள சில கடும்போக்காகளர்களை கண்காணித்து வந்த வைத்திருந்த இலங்கை பயங்கரவாத தடுப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் அக்காலத்தில் தெரிவித்திருந்தார்.

எனிலும், விரிவான திட்டமிடல், பாதுகாப்பிடங்கள், திட்டமிடுவோர் மற்றும் செயல்படுத்துவோர் என விரிவான வலையமைப்பு, குண்டு தயாரிப்பு நிபுணர்கள் மற்றும் கணிசமான நிதி ஆதரவு அனைத்தும் இதற்கு தேவைப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் ஒரு நாட்டின் கண்காணிப்பில் இருந்து தப்பியது எப்படி? இந்த கேள்விகள் சிலவற்றிற்கு பதில் இல்லை.

ஆனால், பல ஆண்டுகளாக பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு தெரியாமலேயே சிறிய எண்ணிக்கையிலான சாக துணிந்த கடும்போக்காளர்களும், ஐஎஸ் அனுதாபிகளும் எவ்வாறு உருவாகி வந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைப்புகள் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“சிரியாவிலும், இராக்கிலும் தாங்கள் கட்டுப்படுத்திய இடங்களை இழந்துள்ள இந்த குழு, தங்களின் இடங்களின் ஒரு பகுதியாக இலங்கை தீவை பார்க்கிறது” என் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐஎஸ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று அறிக்கை வெளியிட சமீபத்தில் “அமைதியை நிலைநாட்டிய நாடு ஒன்றை தேர்வு செய்திருக்கிறது,” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகமொன்றுக்கு செய்தி வழங்கியிருந்தார்.

“போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, பல தசாப்பதங்களாக கடும் வன்முறைகளை அனுபவித்துள்ளது. ஆனால், இந்த முறை இலங்கையின் படைப்பிரிவுகள் யாரை எதிர்க்க முயல்கின்றன என தெளிவாக தெரியவில்லை. எதற்காக இது நடைபெறுகிறது என தெரியவில்லை. உலக அளவில் பயங்கரவாத வலையமைப்பின் ஆதரவோடு இருக்கலாம் என ஊகமே உள்ளது.

இதற்கான போராட்டம் நீண்டதாக அமையலாம். ஆனால், அரசியல் ரீதியாக பிளவுண்டிருந்தால் நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பலரும் அஞ்சுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு உள்வாங்கப்பட்டு பல்வேறு தரப்பின் கைதுசெய்யப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது செனல் 4 நாளை வெளியிடவுள்ளதாக கூறப்பட்ட காணொளியானது இலங்கை அரசியலில் மறைக்கப்பட்ட உண்மைகளையும், உயிரிழந்த எமது உறவுகளுக்கான நீதியாகவும் அமையும் என்பதே எல்லோரது மனதிலும் உள்ள எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

Exit mobile version