இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்

Published

on

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் தலைமையில் நேற்று (01.09.2023) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்ததுள்ளனர்.

மேலும், அது தொடர்பில் அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Exit mobile version