இலங்கை

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

Published

on

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் நேற்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று முன்தினம் (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,29,432 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இந்தநிலையில், நேற்றைய (01) தங்க நிலவரத்தின்படி, தங்கம் அவுன்ஸ் விலை – ரூ. 6,21,995 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,75,550 ரூபாவாக பதிவாகிய அதேவேளை, 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,61,000 ரூபாவாக பதிவாகியது.

அதசமயம் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண் ) தங்கத்தின் விலை – ரூ.1,53,650 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் (31) 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,77,650 ரூபாவாக பதிவாகியதுடன், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,62,900 ரூபாவாக பதிவாகியிருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரியளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version