இலங்கை
வீழ்ச்சியடைந்துள்ள ஏற்றுமதி வருமானம்!
வீழ்ச்சியடைந்துள்ள ஏற்றுமதி வருமானம்!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களுக்குள் ஏற்றுமதி வருமானமானது வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 10.3 வீதத்தில் இவ்வாறு ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், 6,891 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளது.
பெட்ரோலிய உற்பத்திகள் சார்ந்து ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெட்ரோலிய உற்பத்திகள் சார்ந்த ஏற்றுமதி வருமானம் 24.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.