இலங்கை

தொல்லியல் அடையாளங்கள் அழிப்பின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

Published

on

தொல்லியல் அடையாளங்கள் அழிப்பின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் அழிக்கப்படுவதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளே உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இதனை செய்து வருகின்றனர். அப்பாவி தமிழ் மக்கள் இதன் பின்னணியில் இல்லை. மாறாக தமிழ்த் தலைவர்களே இதன் பின்னணியில் செயற்படுகின்றனர்.

இந்த நாட்டில் தற்போது வாழ்வதற்காக போராட வேண்டியுள்ளது. தண்ணீர்கூட இல்லை. ஆனால் அரசியல் செய்கின்றனர்.

ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முற்படுகின்றனர். நாமலை முன்னிலைப்படுத்துகின்றனர் இது தவறு என தெரிவித்துள்ளார்.

Exit mobile version