இலங்கை

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம்

Published

on

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம்

தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு, அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்த்து வைப்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மட்டும், முன்னர் அறிவிடப்படும் அபராதத் தொகையான 250 ரூபாவை வசூலிக்க ஆட்திவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version