இலங்கை
தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் – ஒப்புக்கொண்ட எம்.பி
தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் – ஒப்புக்கொண்ட எம்.பி
சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்கள் வசிக்க முடியுமாயின், ஏன் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்கள் வசிக்க முடியாது என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலனுடனான சந்திப்பில் பெரும்பான்மை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் மீளெடுக்கப்பட்டு 14 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை தொடர்பாக தாம் முன்வைத்த கருத்தை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.