இலங்கை
சீனாவின் எரிபொருள் நிலையத்தில் குறைந்த விலையில் பெட்ரோல்,டீசல்
சீனாவின் எரிபொருள் நிலையத்தில் குறைந்த விலையில் பெட்ரோல்,டீசல்
சந்தையில் தற்போதுள்ள, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை விட சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 ரூபா குறைவாக பெட்ரோல் மற்றும் டீசலை பெற்றுக் கொள்ள முடியும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சினோபெக் நிறுவனம் தயாராகி வருகின்றது.
சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான 20 ஆண்டுகால உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இரண்டு எரிபொருள் கப்பல்கள் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள நிலையில், குறித்த நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இதன்மூலம் கட்டம் கட்டமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாட்டில் திறக்கப்படவுள்ளன.