இலங்கை

சிங்கப்பூர் தேர்தலில் களமிறங்கும் தமிழர் வெளியிட்ட தகவல்

Published

on

சிங்கப்பூர் தேர்தலில் களமிறங்கும் தமிழர் வெளியிட்ட தகவல்

சீன இனத்தை சாராத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க சிங்கப்பூர் தயாராக உள்ளதாக சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார்.

இந்நிலையில்,சிங்கப்பூரில் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் 13ம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அவர் கடந்த மே 29ம் திகதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம், தேர்தல் பிரச்சாரத்தை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. சீனர்கள் அதிக அளவு வாழும் சிங்கப்பூரில், எதிர்வரும் 1ம் திகதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு மூன்று பேரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழிலேயே பேசி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூர் மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. அவர்கள் இனத்தை மட்டும் பார்க்காமல், அனைத்து விஷயங்களையும் தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுத்து வருகின்றனர். “சீன இனத்தை இல்லாத ஒருவரை பிரதமராக காண சிங்கப்பூர் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version