இலங்கை
ஹோட்டல் அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்!


ஹோட்டல் அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்!
பண்டாரவளை நகரில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் விஷம் அருந்தியதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி – கோணவலயை சேர்ந்த 50 வயதான நபரொருவர் (23) ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளதுடன், மனைவியை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் அவசரமாக ஹோட்டலில் இருந்து வௌியேறியதால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் அறையை சோதனையிட்ட போது குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதன்போது ஹோட்டலிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கடிதமொன்றினை எழுதிவைத்து தலைமறைவாகியிருந்த நிலையில்,பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் விஷம் அருந்தியமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் விசாரணைக்காக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.