இலங்கை

இலங்கையின் மேற்கு பகுதிகளில் கரையொதுங்கும் ஆமை சடலங்கள்

Published

on

இலங்கையின் மேற்கு பகுதிகளில் கரையொதுங்கும் ஆமை சடலங்கள்

நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரைப் பகுதியில் மூன்று நாட்களுக்குள் சுமார் 20 ஆமை சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் இந்துருவ கடற்பகுதிகளில் இருந்து இந்த ஆமை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வனவிலங்கு திணைக்களம் பல ஆமைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த ஆமைகள் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) இறந்த அனைத்து ஆமைகளும் ஒரே அளவு மற்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று வெளிப்படுத்தியுள்ளது.

இதனால் கடற்பகுதிகளில் உள்ள நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version