இலங்கை
அதிகரிக்கப்படும் அரிசியின் விலை
அதிகரிக்கப்படும் அரிசியின் விலை
அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, அரிசி விலை அதிகரிப்பு நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று 2023.08. 21ஆம் திகதி நிலவரப்படி, நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக மொத்தம் 46,904 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குருநாகல் மாவட்டத்தில் 23,286 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,904 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாவது அதிகளவிலான பயிர் சேதங்கள் உடவளவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, இந்தப் பகுதியில் 14,667.5 ஏக்கர் சாகுபடி நிலங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,867 ஆகும் என்றும் விவசாய அமைச்சகம் குறிப்பிடப்படுகின்றது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் - tamilnaadi.com