இலங்கை
மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்
மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்
மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் பதிவாகும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தில் எவ்வளவு பெரிய மதுபான நிறுவனம் குற்றவாளியாக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மதுபான தொழிற்சாலைகளையும் கண்காணிப்பதற்கு கலால் திணைக்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கலால் திணைக்கள அதிகாரிகளின் தவறுகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளில் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 8000 போலி மது போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
மதுபான நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை குறைக்க போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்துவதால், கடந்த காலங்களில் மது வரி வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login