Connect with us

இலங்கை

வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன்

Published

on

வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன்

வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன்

நான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்து அரசியலுக்கு வந்தேன் ஆனால் சாணக்கியன் போன்ற சில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது அரசியல் வாழ்க்கை 30 வருடங்களை கடக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் இன்றும் அரசியலில் செய்யப்பட்டிருக்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனது அமைச்சு சார்ந்து பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

நான் எழுந்து என்ன பிரச்சினையை தீர்க்கவில்லை கூறுங்கள் பார்ப்போம் என கூறிய போது அவர் மௌனமாக இருந்தார். என்னிடம் நான் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும்போது பிரச்சினைகளை கூறுங்கள் தீர்வு காண்போம் எனத் தெரிவித்திருந்தேன்.

சாணக்கியன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சிலர் மக்கள் அனுபவித்த துன்பங்கள் வேதனைகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது மக்கள் பிரச்சினையை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர் நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பில் தற்போது அரசியல் கட்சிய அலுவலகம் அமைத்து செயற்படுவதாக கூறியிருந்தார். அவருக்கு சிலவேளை தெரியாமல் இருந்திருக்கலாம். 90க்கு பிற்பட்ட காலங்களில் மட்டக்களப்பில் எமது அலுவலகம் திறப்பு செய்யப்பட்ட நிலையில் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தபோது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தார்.

இதை பற்றி அறிந்திடாத சாணக்கியன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தேர்தலில் இறங்கினார். பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் இறங்கினார். நாளை இன்னோரு கட்சியிலும் தேர்தலில் இறங்கலாம்.

ஆனால் போராட்ட இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய எங்களிடம் கொள்கை இருக்கிறது. ஆனால் இவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் நானும் பங்கு எடுத்தவன் என்ற வகையில் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

என்னுடன் போராடிய சக இயக்கங்களைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவனேசதுரை சந்திரகாந்தன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.

அவர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆரம்ப அரசியல் தீர்வான 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்.

ஆகவே தமிழ் மக்களின் வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன் போன்ற சிலர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி பிரச்சனைகளைத் தீராப் பிரச்சினையாக்கக் கூடாது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 20 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் புரட்டாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் பூரம்,உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் : 19 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2024, குரோதி வருடம் புரட்டாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் மகம், பூரம், ரோகிணி...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 18.09.2024, குரோதி வருடம் புரட்டாசி 2, புதன் கிழமை, சந்திரன் கும்பம்,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.09.2024 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 15 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 15.09.2024, குரோதி வருடம் ஆவணி 30, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் 14.09.2024 , குரோதி வருடம் ஆவணி 29, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024 இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில்...