இலங்கை
அமெரிக்க டொலரின் பெறுமதியில் தலைகீழ் மாற்றம்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் தலைகீழ் மாற்றம்
இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (10.08.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.312.39ல் இருந்து ரூ.311.42 ஆகவும், ரூ.327.76ல் இருந்து ரூ.326.74 ஆகவும் குறைந்துள்ளன.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.310.77ல் இருந்து ரூ.309.78 ஆகவும், விற்பனை விலை ரூ.326ல் இருந்து ரூ.325 ஆகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.315ல் இருந்து ரூ.314 ஆகவும், ரூ.327ல் இருந்து ரூ.326 ஆகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login