Connect with us

அரசியல்

நாடாளுமன்றத்தில் பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தை பிரயோகம்!

Published

on

நாடாளுமன்றத்தில் பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தை பிரயோகம்!

நாடாளுமன்றத்தில் பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளை பேசியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள ஆண் விபச்சாரி ஒருவர் கட்சி தலைவராகும் நோக்கில் செயற்படுகிறார். என் வாயை அவர் குழப்பிக்கொள்ள கூடாது என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் குறிப்பிட்ட கருத்துக்கே ரவூப் ஹக்கீம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை தகாத வார்த்தைகளை குறிப்பிடும் போது சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டு அதை இரசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரை நோக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று (08.08.2023) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத், தனியார் ஊடகம் கடந்த காலங்களில் எனக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டது.

நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அந்த ஊடகம் அழைக்கப்பட்ட போது தவறை ஏற்றுக்கொண்டார்கள்.

அந்த தனியார் ஊடகத்தை போன்று நாடாளுமன்றத்தில் ஆண் விபச்சாரி ஒருவர் செயற்படுகிறார். கட்சி தலைவராகும் நோக்கத்தில் இருந்துக் கொண்டு செயற்படும் கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் ஆண் விபச்சாரி போல் செயற்படுகிறார்.

ஆகவே, அந்த ஆண் விபச்சாரி எம்மை குழப்பிக்கொள்ள கூடாது என்று தகாத வார்த்தைகளை சபையில் பேசியுள்ளார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இந்த உறுப்பினருக்கு உரிய நாடாளுமன்ற உறுப்பினருடன் தனிப்பட்ட முரண்பாடுகள் காணப்படலாம். அதை அவர் முறையாக அணுக வேண்டும்.

அதை விடுத்து நாடாளுமன்றத்துக்கு பொறுத்தமற்ற வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது.

நாடாளுமன்ற களரியில் பாடசாலை மாணவர்கள் உள்ளார்கள்.இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது. சபைக்கு தலைமை தாங்கும் பிரதி சபாநாயகர் இதற்கு இடமளிக்க கூடாது என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, சகல உறுப்பினர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.அந்த அமைச்சர் என்ன உரையாற்றுவார் என்பது எனக்கு தெரியாது. ஆகவே சபைக்கு தலைமை தாங்குபவர் மீது மாத்திரம் பொறுப்பை சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை வாய்மொழி கேள்வியின் போது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பதிலளித்துக் கொண்டிக்கிறார். இடையில் பொருத்தமற்ற வகையில் சாமர சம்பத் எழுந்த பேசுகிறார். சபைக்கு தலைமை தாங்கும் பிரதி சபாநாயகர் அதை இரசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் பார்க்க வேண்டியதில்லை.நீங்கள் தான் சபையை முறையாக வழிநடத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச ஒழுங்கு பிரச்சினை என்று குறிப்பிட்டு அவர் எழுந்து உரையாற்றினார். விடயதானத்துக்கு அமைய ஒரு சிலர் உரையாற்றுவதில்லை.இவ்விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டார். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் அந்த ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.

ஆண் விபச்சாரி இருப்பாராயின் அதை அவர் வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத்துக்கு பொறுத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஆகவே குறைந்தபட்சம் விபச்சாரி என்ற வார்த்தையையேனும் நீக்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 9, 2024, குரோதி வருடம் ஆவணி 24, திங்கட்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8, 2024, குரோதி வருடம் ஆவணி 23, ஞாயிற்று...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 07 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 07 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 7, 2024, குரோதி வருடம் ஆவணி 22, சனிக்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 06 செப்டம்பர் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06, 2024, குரோதி...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 05 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 05 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2024, குரோதி வருடம் ஆவணி 20, வியாழக்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 4 செப்டம்பர் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 4 செப்டம்பர் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் செப்டம்பர் 4, 2024, குரோதி வருடம் ஆவணி 19, புதன் கிழமை,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 3 செப்டம்பர் 2024 – Horoscope Today

இன்றைய ராசிபலன் : 3 செப்டம்பர் 2024 – Horoscope Today இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3, 2024, குரோதி வருடம் ஆவணி 18, செவ்வாய்க் கிழமை,...