இலங்கை
யாழில் குடும்பஸ்தரொருவர் கிராம மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை
யாழில் குடும்பஸ்தரொருவர் கிராம மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி யுவதியொருவரை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய நபர் ஒருவருடன் குறித்த 19 வயது யுவதிக்கு ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதியளித்ததால், இருவரும் நேற்றைய தினம் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அதன்போது குடும்பஸ்தர் கிராம மக்களால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது கடும் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பிவைத்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது கடும் தாக்குதலுக்குள்ளான யுவதியும் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login