இலங்கை
மனைவியைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்
மனைவியைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்
நுவரெலியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச் சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
பொலிஸ் விசாரணையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் கணவர் சுட்டது தெரியவந்துள்ளது.
நுவரெலியா, டோப்பாஸை வசிப்பிடமாகக் கொண்ட 28 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே இந்தச் சம்பவத்தல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: ரசாயனம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட கனேடிய இளைஞர் - tamilnaadi.com