இலங்கை
நடைமுறைக்கு வந்துள்ள தடை!
நடைமுறைக்கு வந்துள்ள தடை!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் மற்றும் வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட அறிவித்துள்ளார்.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வனப்பகுதியை பார்வையிட விரும்பினால் விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் வனப்பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் நேற்றைய தினம் (04.08.2023) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் மற்றும் வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மலையேறுவதற்கும், அங்கு முகாமிடுவதற்கும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்காலத்தில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வனப்பகுதியை பார்வையிட விரும்பினால் விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படுகின்ற அனுமதி பொலிஸாருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், பயணத்தின் நிறைவிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட வேண்டும் என்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login