இலங்கை
இலங்கை அருகே கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு


இலங்கை அருகே கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு
இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தப் பகுதி இந்தியப் பெருங்கடல் ஈர்ப்புத் துளை என்று அழைக்கப்படுகிறது. சராசரி உலகளாவிய ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும்போது குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட இந்த துளை 3 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பளவில் பரவியுள்ளது.
இந்த பள்ளம் பகுதியில் கடல் மட்டம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 106 மீட்டர் கீழே உள்ளது. 1948 ஆம் ஆண்டில், நெதர்லாந்து புவியியலாளர்கள் குழு இந்த கண்டுபிடிப்பை முதன்முறையாக மேற்கொண்டது, ஆனால் அப்போதிருந்த அழுத்த சூழ்நிலைக்கான காரணம் இன்னும் விளக்கப்படவில்லை.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 20 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பகுதியில் உள்ள டெக்டோனிக் தகடுகள் எனப்படும் பாறைமண்டலங்களின் செயல்பாடுகளுக்கு அறிவியல் விளக்கம் அளித்துள்ளது.
பூமியின் உட்புறத்தில் இருந்து வெளிப்படும் எரிமலைக் குழம்பு மற்றும் பாறைமண்டலம் ஒன்றோடு ஒன்று மூலமும் இந்த துளை உருவானது என விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
You must be logged in to post a comment Login