இலங்கை
குறைக்கப்படவுள்ள முட்டை விலை: வெளியான அறிவிப்பு


குறைக்கப்படவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு
உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை காரணமாக முட்டை விலை குறைவடையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.
மேலும், முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நேற்று (25.07.2023) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்திருந்த நிலையியே இவ் அறிவித்தல் வெளியாகியுள்ளது.
போட்டித் தன்மையில் விலை நிர்ணயம்
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள், லங்கா சதொச நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 35 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போட்டித் தன்மையில் விலையை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login