இலங்கை
கோட்டா – வஜிர இரகசியப் பேச்சு


கோட்டா – வஜிர இரகசியப் பேச்சு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன எம்.பியும் விமான நிலையத்தில் இரகசியக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச கம்போடியாவுக்கான இரண்டு வார யாத்திரையை முடித்துவிட்டு கடந்த வாரம் சிங்கப்பூர் எயார் லைன்ஸ் விமானத்தின் ஊடாக இலங்கை திரும்பினார்.
அப்போது அதே விமானத்தில் வஜிர அபேவர்த்தனவும் வந்திருந்தார். அவர் சிகிச்சை ஒன்றுக்காகச் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் விமானத்தில் ஒன்றாகவே இலங்கை வந்தனர்.
அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கிய பின்பும் இரகசியக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் கலந்துரையாடல் தொடர்பான உத்தியோகப்பூர்வ செய்தி இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
You must be logged in to post a comment Login