இலங்கை
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்படுகின்றமைக்கு அமைய கடன் வட்டி வீதங்களை உடனடியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடன் வட்டி விகிதங்கள் போதியளவு குறைக்கப்படாவிட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ இது தொடர்பில் மத்திய வங்கி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login