இலங்கை

முத்துராஜா யானையின் உடல்நிலை குறித்து வெளியான வைத்திய அறிக்கை

Published

on

முத்துராஜா யானையின் உடல்நிலை குறித்து வெளியான வைத்திய அறிக்கை

முத்துராஜாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை அந்நாட்டு யானைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா யானை தற்போது லம்பாங் யானைகள் பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முத்துராஜா யானையின் உடல்நிலை குறித்து நடத்தப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, முத்து ராஜாவுக்கு எந்தவிதமான உடல் நலக்குறைவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

யானைகளுக்கு பொதுவாக ஆறு முக்கிய நோய்கள் ஏற்படுவதுடன், யானையின் இரத்த மாதிரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் முத்துராஜாவுக்கு அந்த நோய் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

முத்துராஜா ஒரு நாளைக்கு 120 முதல் 200 கிலோ வரையிலான புற்கள் மற்றும் பழங்களை சாப்பிடுவதாகவும், முத்துராஜா ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது மூன்று மணி நேரம் தூங்குவதாகவும் லாம்பாங் காட்டு யானைகள் பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.

முத்துராஜா தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் (11) பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில், தாய்லாந்து யானைக் காவலர்களுக்கு முத்துராஜா பணிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தாய்லாந்தில் முத்துராஜாவுக்கு அளிக்கப்படும் பராமரிப்பில் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக முத்துராஜாவின் பிரதான பாதுகாவலராக இருந்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் யானைப் பாதுகாவலர் உபுல் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

யானைக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதால் முத்துராஜாவுடனான தாய்லாந்து பயணம் எளிதாக இருந்ததாகவும் முத்துராஜா, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த போது யானையை நன்றாக பராமரித்து, உரிய நேரத்தில் மருந்து மற்றும் உணவு வழங்கியதாகவும், தற்போது குணமடைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version