இந்தியா
தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம்
தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம்
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை மற்றும் பதிமூன்றாம் திருத்தச்சட்டம் தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழில் 07.07.2023 இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார்.
இந்நிலையில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை, இன விடுதலைக்கான தீர்வுகள் மற்றும் பதின்மூன்றின் நிலைமைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் இந்திய பிரதமருக்கு சக தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளோம்.
குறித்த கடிதம் தொடர்பில் எமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.
மேலும், இந்த கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடிதம் கிடைத்ததும் கட்டாயம் மோடிக்கு அனுப்பப்படும்.”என தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login