Connect with us

இலங்கை

குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதி : வெடித்த சர்ச்சை

Published

on

குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதி : வெடித்த சர்ச்சை

குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதி : வெடித்த சர்ச்சை

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதியொருவரின் தலையீட்டை வாய்ப்பாக பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை தூண்டிவிடுவதற்கே சரத் வீரசேகர முயற்சிக்கின்றார் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னணியிலேயே, அதனை பார்வையிடுவதற்காக நீதிபதி அங்கு பிரசன்னமானார் என இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறிருக்கையில், தனது பணியை செய்த நீதிபதியொருவரை நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி இவ்வாறு விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை தன்னை ஒரு சிங்கள அபிமானியாகவும், சிங்கள தேசியவாதியாகவும் காண்பித்துக்கொள்ளும் சரத் வீரசேகர கூறுகின்ற கருத்துக்களை தாம் ஏற்றுக்கொள்வதில்லை என்றும், சரித்திரத்தை அறிந்துகொள்ளாமல் ‘இலங்கை சிங்கள பௌத்த நாடு’ என்று அவர் கூறுவது அவரது அறியாமையையே காண்பிக்கிறது என்றும் முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நீதிபதியை அவமதிக்கும் விதமாக சரத் வீரசேகர கூறியிருக்கும் கருத்துக்கள் மிக மிகக் கேவலமானவையாகும்.

சரத் வீரசேகரவுக்கு தன்னை ஒரு சண்டியர் போன்று காண்பித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம். ஒரே விடயத்தை நூறு முறை கூறுவதால் அது உண்மையாகிவிடாது என்றும் விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள இனவெறிக்கருத்தை கடுமையாக கண்டிக்கிறோம் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் கூறியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதியொருவரின் தலையீட்டை வாய்ப்பாக பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை தூண்டிவிடுவதற்கே சரத் வீரசேகர முயற்சிக்கின்றார் எனவும் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (07.07.2023) நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய உரையில், குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகின்றார்கள்.

ஆகவே, பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 8.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு...