அரசியல்
தமிழர்களின் நகைகளை சரத்பொன்சேகாவே அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்! சிறீதரன் பகிரங்கம்
தமிழர்களின் நகைகளை சரத்பொன்சேகாவே அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்! சிறீதரன் பகிரங்கம்
தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நகைகள் மற்றும் பணம் தொடர்பாக எந்தவொரு இலங்கை அரசும் பொறுப்புக் கூறாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (06.07.2023) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலே இடம்பெற்ற யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தமிழ் மக்களுடைய ஒரே ஒரு மூலாதாரதான வங்கியாக இருந்த தமிழீழ வைப்பகத்திலே தமிழர்கள் பல பேர் அதிகளவாகத் தங்க நகைகளை அடகு வைத்திருந்தார்கள்.
மேலும் அதிகளவில் பணத்தை வைப்பிலிட்டிருந்தார்கள் இவ்வாறு வைப்பு செய்யப்பட்ட பணத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என தெரிவித்துள்ளார்
You must be logged in to post a comment Login