இலங்கை
ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்
ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்
நாட்டிலுள்ள சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மழையுடனான காலநிலை நீடிக்காவிட்டால், இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே விவசாயத்திற்கு நீரை வழங்க முடியும் என்றும் மகாவலி அதிகார சபை அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக உடவலவ நீர்த்தேக்கம் காணப்படுகின்றது.
இதன்மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அத்துடன், சுமார் 25 ஆயிரத்து 300 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும், சுமார் 36 ஆயிரம் விவசாயக் குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login