இலங்கை
மக்களை வைத்து பிச்சையெடுக்கும் அரசாங்கம்! பேராயர் காட்டம்
மக்களை வைத்து பிச்சையெடுக்கும் அரசாங்கம்! பேராயர் காட்டம்
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாகவும், நாட்டை காட்டி பிச்சை எடுக்கும் தலைவர்கள் கூட்டம் நாட்டில் இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
தற்போதைய வரட்சியைக் கூட தற்போதைய ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாது எனவும், அதனை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்த கொழும்பு பேராயர்,
பமுனுகம பட்டா முழுவதையும் வெளிநாடுகளுக்கு விற்று, சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்து அவர்கள் இறந்துவிடுவார்கள், பிறகு நாட்டு மக்களுக்கு வீணாவதைத் தவிர வேறொன்றுமில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடருமானால் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அழிந்துவிடும் எனவும் மக்களுக்கு ஜனாதிபதி பொய்யான கனவுகளை காட்ட வேண்டாம் எனவும் பேராயர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login