இலங்கை
ஜனாதிபதி முன்னிலையில் காரசாரமான விவாதம்!
காரசாரமான விவாதம்!
கடன் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண மானிய முறைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் சூடுபிடித்த சூழ்நிலையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் மாலை நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டமும் நடைபெற்றிருந்தது.
நிவாரண உதவித் தொகை முறையின் குறைபாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுட்டிக்காட்டிய போது அந்த குறைபாடுகளை சரி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கருத்திற்கு எதிராக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து தெரிவித்ததால் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலைமையை ஜனாதிபதி தலைவிட்டு தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login