இலங்கை
ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக யாழ் பல்கலையின் துணைவேந்தர் நியமனம்!
யாழ் பல்கலையின் துணைவேந்தர் நியமனம்!
ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்தவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் கீழ் இந் நவீன தொழிநுட்பவியல் நிறுவனம் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login