இலங்கை
அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தை தாமதப்படுத்தியமை தொடர்பில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை செய்து வருகின்றது.
குறித்த நீதிபதிகள் குழுவினாலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பணம் இல்லை எனக் கூறி தேர்தலை ஒத்தி வைத்து வந்த அரசாங்கத்தின் நாடகம் நீதிமன்றில் அம்பலமாகி வருவதாக பிரபல சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட அரசாங்க அதிகாரிகளும் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login