இலங்கை
கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்

ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணி பிரச்சினையால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தை மற்றும் மகன் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 வயதுடைய மகன் நேற்று முன்தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தங்கவேலு சண்தலு சந்துஷ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜப்பானில் வேலை பெறுவதற்காக அவர் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஹகுரன்கெத்த – உடவத்தகும்புரவில் கடந்த 19 ஆம் திகதி இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
You must be logged in to post a comment Login