இலங்கை
மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!
மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்புரிமை அமைப்பான அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் மே 18 நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டம் கிராமத்தில் குறித்த நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் இதனை அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் பத்மநாதன் சிரோஜன் (29) முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரும், புலனாய்வுத் துறையினரும் அவரை அவ்விடத்தில் கைதுசெய்து விசாரணைக்காக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.
You must be logged in to post a comment Login