அரசியல்
ஜீவன் தியாகராஜா நீதிமன்றத்தை நாடுமாறு யாழ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!
ஜீவன் தியாகராஜா நீதிமன்றத்தை நாடுமாறு யாழ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் உட்பட சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் கூட்டத்தின் பங்கு பற்றி இடைநடுவில் வெளிநடப்பு செய்வதாக வெளியேறினர்
தையிட்டியில் விகாரை கட்டப்படக்கூடாது என ஏற்கனவே யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனினும் ஒருங்கிணைப்பு குழுவில் எடுக்கப்பட தீர்மானத்திற்கு எதிராக விகாரை கட்டப்பட்டுள்ளது அதேபோல தற்பொழுது எமதுபாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்உட்படமேலும் இருவர் அங்கே முற்றுகைகக்குள் உள்ளார்கள் பொலிசார் மிகவும் மோசமாக செயற்பட்டு இருக்கிறார்கள்
அமைதியாக இருந்த மக்களை விரட்டி அடித்திருக்கின்றார்கள் எனவே நாங்கள் இந்த கூட்டத்தில் தொடர்ச்சியாக பங்கு பற்றுவது உசிதமானதல்ல என தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை வெளிநடப்பு செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கூட்டத்தில்தெரிவித்து வெளியேறினர்.
தையிட்டி விகாரைவிடயம் தொடர்பில் நீதிமன்றத்தினை நாடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்,
தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோரைபொலிசார் தாக்கியதாகவும் அத்துமீறி விரட்டியதாகவும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது .
குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுமாறு ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதோடு குறித்த விடயம் தொடர்பில் நீதிபதியினை குறித்து இடத்திற்கு அழைத்துச் செல்வதும் மிக உசிதமான விடயம் எனவும் தெரிவித்திருந்தார்.
#srilankaNews
You must be logged in to post a comment Login