Connect with us

இலங்கை

நாட்டை முன்னேற்ற புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும்- சாகல கோாிக்கை!

Published

on

IMG 20230428 WA0017

நாட்டை முன்னேற்ற புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும்- சாகல கோாிக்கை!

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின்  பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுகிறோம் என ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரட்நாயக்க யாழில்  தெரிவித்தார்

வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

ரணில் விக்ரமசிங்க அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வறிய குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வீதம் வரிய குடும்பங்களுக்கு உதவி வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வறிய மக்களுக்கு மிகவும் ஒரு வரப்பிரசாதமான விடயம் அதேபோல விவசாய மக்களுக்கு அதாவது இந்த பெரும் போகத்தின் பின்னர் நெல்லினை விற்பனை செய்வதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது

இலங்கை ராணுவத்தினர் பாதுகாப்புகடமையில்ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள் இலங்கை ராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமது செலவுகளினை கழித்து விட்டு மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்குவழங்க  தயாராக இருப்பதாக ராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார் அவர்களுடைய விருப்பத்தின்படி இன்றைய தினம் அது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது

நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு  முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது அதாவது கொரோனா நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது அதேபோல பொதுமக்களால்  மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது அதேபோல பொருட்களைக் கொள்ளவும் செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது

அது வடக்கு கிழக்கு அல்ல தெற்கு  மக்கள் என்றல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது

அந்த நேரத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி  விக்கிரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக ஐனாதிபதி   பதவியினை பொறுப்பேற்றிருந்தார்

அந்த நேரத்தில் டொலர் பிரச்சனை அதே போல கொள்வனவு  செய்வதற்கு நிதி இல்லை  உல்லாச பயணிகளின் வருகை குறை வடைந்திருந்தது , தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மின்சாரம் இல்லை எரிபொருள் இல்லை அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதியில்லை மருந்து பொருட்கள் வாங்க நிதியில்லை போன்ற பல்வேறுபிரச்சனை அந்த நேரத்தில் காணப்பட்டது

மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது ஆனால்ரணில்  விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுத்தார்,

எமது நாட்டைப் போல வேறு பல நாடுகளும்  சர்வதேச நாண நிதியத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து  நிதியினை பெற முடியாத நிலையில்  உள்ளார்கள் ஆனால்  ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க அவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு தற்பொழுது நாடு படிப்படியாக முன்னோக்கிச் செல்கின்றது,

நாங்கள் முன்னோக்க நகர்கின்றோம் ஒரு அடி ஏனும் பின்னோக்கி செல்ல மாட்டோம் என்ற அடிப்படையில் தற்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும்  திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்

இந்த வேலை திட்டத்தில் முழு இலங்கையும் உள்ளடங்கப்பட்டுள்ளது

வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்றி அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நாட்டின் உதவியுடன்அபிவிருத்தி செய்து   வர்த்தகத்தை ஏற்படுத்தி வடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த நாங்கள் முனைகின்றோம்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும்

அதேபோல சமுர்த்தி கிடைக்காத குடும்பங்களும் தமக்கு சமுர்த்தி கிடைக்காமை  தொடர்பில் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் அதாவது விண்ணப்ப படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து உரிய அலுவலகருக்கு அனுப்புவதன் மூலம்  உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியும்,

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது

அந்த அழைப்பினை  அனைவரும் ஒன்றிணைந்து  விடுவோம் இங்கே முதலீடுகளை மேற்கொண்டு   பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு நாம் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுவோம் என்றார்.

#srilankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்17 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...