இலங்கை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற குழப்பம் கொலையில் முடிந்தது.
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரேவத்தை பகுதியில் நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் அங்கு வருகை தந்த நபர் ஒருவர் குறித்த இருவரிடமிடமும் முரண்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதுபானம் அருந்தியவர்களில் ஒருவர் குறித்த நபரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login