இலங்கை
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு இந்த நிலை மேலும் அதிகரிக்க காரணமாக உள்ளது.
குறிப்பாக, மேல்மாகாணத்தில் அண்மைய வருடங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவானது 2017 ஆம் ஆண்டாகும். அதன் பின்னர் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் 2023 ஆம் ஆண்டில் பதிவாகலாம்.
அதன்படி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் மோசமடையக்கூடும் என்பதுடன், தற்போதைய ஆபத்து சூழ்நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மேல்மாகாண சுகாதார திணைக்களம் இன்று (26) முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்தல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள மேல் மாகாணத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
#srilankaNews
You must be logged in to post a comment Login